கோவை மாவட்டம், பேரூர் வட்டம், கோவை நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ கடல் மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் ஏழு நிலை இராஜகோபுரத்துடன் அழகுற அமையப் பெற்றுள்ளது. பழமையும் பெருமையும் வாய்ந்த கொங்குநாடு. அப்பெருமைமிக்க கொங்குவள நாட்டிலே மங்கா புகழாக விளங்குகின்ற அணிகொங்கு மேற்றலையாம் மருதமலை என்னும் திருத்தலம் தொன்மையான திருத்தலம் ஆகும். கருதுவார்க்கும் களி தர வல்லது பொருதுவார்க்கு புய வள ஈவது சுருதி நீண் முடி போல்வது தூய்மையில் மரு வோங்கல் வளத்தில் பெரியதே என்று கச்சியப்ப முனிவர் பேரூர் புராணத்தில் மருதவரைப் படலம் அபயப் படலத்தில் மருதமலையைக் குறித்து...
06:00 AM IST - 01:00 PM IST | |
02:00 PM IST - 08:00 PM IST | |
01:00 PM IST - 02:00 PM IST | |
குறிப்பு: விசேஷ தினங்களில் முழு நேரம் தரிசனம் நடைபெறும்.(காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை). வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் இரவு 7.00 மணிக்கு மேல் பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைமேல் செல்வதற்கு வனத்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. |